Brahma Kumaris Murli Tamil 29 December 2019

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Brahma Kumaris Murli Tamil 29 December 2019

    Brahma Kumaris Murli Tamil 29 December 2019
    Brahma Kumaris Murli Tamil 29 December 2019

    29.12.2019   காலை முரளி   ஓம் சாந்தி   அவ்யக்த முரளி   பாப்தாதா,   மதுபன்   ரிவைஸ்    27.03.1985 

    கர்மாதீத் நிலை 

    இன்று பாப்தாதா நாலாபுறங்களிலுமுள்ள குழந்தைகளைப் பார்ப்பதற்காக விசேஷமாக சுற்றி வலம் வரச் சென்றார். எப்படி பக்தி மார்க்கத்தில் நீங்கள் அனைவருமே அநேக முறை பரிக்கிரமம் அதாவது சுற்றி வந்திருக்கிறீர்கள். இன்று பாப்தாதாவும் நாலாபுறங்களிலுமுள்ள உண்மையான பிராமணர்களின் ஸ்தானங்களை சுற்றி வந்தார். அனைத்துக் குழந்தைகளின் ஸ்தானங்களையும் பார்த்தோம். ஸ்திதி அதாவது நிலையையும் பார்த்தோம். ஸ்தானங்கள் விதிப்பூர்வமாக பல வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சில ஸ்தூல சாதனங்களினால் கவர்ந்து இழுப்பவையாக இருந்தன. சில தபஸ்யாவின் வைப்ரேஷன் மூலம் கவர்ந்து இழுப்பவையாக இருந்தன. சில இடங்கள் தியாகம் மற்றும் சிரேஷ்ட பாக்கியம் அதாவது எளிமையாக மற்றும் சிரேஷ்ட நிலை என்ற இந்த வாயுமண்டலம் மூலம் கவர்ந்து இழுப்பவையாக இருந்தன. சில சில ஸ்தானங்கள் (இடங்கள்) சாதாரண ரூபத்திலும் தென்பட்டன. அனைத்து ஈஸ்வரனின் நினைவிற்கான ஸ்தானத்தை பலவித ரூபத்தில் பார்த்தோம். நிலையாக என்ன பார்த்தோம்? இதிலேயும் கூட பலவிதமான பிராமண குழந்தைகளின் நிலையைப் பார்த்தோம். நேரத்திற்கு ஏற்றாற்போல் குழந்தைகள் எந்தளவு தயார் ஆகியிருக்கிறார்கள், அவைகளைப் பார்ப்பதற்காக பிரம்மா பாபாவும் சென்றார்.பிரம்மா பாபா கூறினார்: குழந்தைகள் அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுப்பட்டு பந்தனம் அற்றவராக, யோக சொரூபமானவராக, ஜீவன் முக்த் எவரெடியாக இருக்கிறார்கள். நேரத்திற்காக மட்டும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தயார் ஆகியிருக்கிறீர்களா? ஏற்பாடுகள் ஆகிவிட்டனவா? நேரத்திற்காக மட்டும் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த மாதிரி பாப்தாதா அவர்களிடையே இந்த ஆன்மீக உரையாடல் இருந்தது. சிவபாபா கூறினார், பந்தனத்திலிருந்து எந்தளவு விடுபட்டு இருக்கிறார்கள், யோக சொரூபமாக எந்தளவு ஆகியிருக்கிறார்கள் என்று சுற்றி வலம் வந்து பார்த்தார். ஏனென்றால், பந்தனமற்ற ஆத்மா தான் ஜீவன் முக்த் வாழ்க்கையின் அனுபவம் செய்ய முடியும். எந்த ஒரு எல்லைக்குட்பட்ட அதாரம் இல்லை, அதாவது பந்தனங்களிலிருந்து விலகி இருப்பவர். ஒருவேளை ஏதேனும் சிறிய மற்றும் பெரிய, ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக, மனதால் மற்றும் காரியத்தினால் எல்லைக்குட்பட்ட ஏதாவது ஆதரவு இருக்கிறது என்றால், பந்தனங்களிலிருந்து விடுபட முடியாது. எனவே இதைப் பார்ப்பதற்காக விசேஷமாக பிரம்மா பாபாவைச் சுற்றி வரக் கூறினோம். என்னப் பார்த்தார்.. 

    பெரும்பான்மையோர் பெரிய பெரிய பந்தனங்களிலிருந்து விடுபட்டு விட்டார்கள். தெளிவாக தென்படும் பந்தனங்கள் மற்றும் கயிறுகள் அவற்றிலிருந்தும் விலகி விட்டார்கள். ஆனால் இப்பொழுது சில ஏதாவது சூட்சுமமான பந்தனம் மற்றும் கயிறுகள் இன்னும் இருக்கின்றன. அவற்றை மென்மையான (நுண்ணியமான) புத்தியைத் தவிர வேறு யாரும் தெரிந்துக் கொள்ளவும் முடியாது. பார்க்கவும் முடியாது. எப்படி இன்றைய நாட்களில் அறிவியலைச் சேர்ந்தவர்களால் சூட்சமமானப் பொருடகளையும், சக்தி சாலியான கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது, அவற்றை சாதாரண முறையில் பார்க்க முடியாது. அந்த மாதிரி சூட்சும பகுத்தறியும் சக்தி மூலமாக அந்த சூட்சுமன பந்தனங்களைப் பார்க்க முடியும் மற்றும் நுண்ணிய புத்தி மூலமாக தெரிந்துக் கொள்ள முடியும். ஒருவேளை மேலோட்டமாகப் பார்த்தீர்கள் என்றால், பார்க்காத மற்றும் தெரியாத காரணத்தினால் அவர்கள் தங்களை பந்தனமற்றவர்கள் என்று தான் நினைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பிரம்மா பாபா அந்த மாதிரி (அவர்கள் பெறும்) சூட்சும ஆதரவை சோதனை செய்தார். மிக அதிகமான ஆதரவை இரண்டு விதமாகப் பார்த்தார். 

    ஒரு மிக சூட்சுமமான சொரூபமாக ஏதாவது சேவையின் துணைவனின் சூட்சும ஆதரவைப் பார்த்தோம். இதிலேயும் அநேக விதங்களைப் பார்த்தோம். சேவையின் சகயோகியாக இருக்கும் காரணத்தினால்,, சேவை வளர்ச்சி அடைவதற்கு பொறுப்பாளராகி இருக்கும் காரணத்தினால் அல்லது ஏதாவது விசேஷம், விசேஷ குணம் இருக்கும் காரணத்தினால், விசேஷமாக ஏதாவது சம்ஸ்காரம் ஒத்துப்போகும் காரணத்தினால் அல்லது அவ்வப்போது ஏதாவது அதிகப்படியான உதவி கொடுக்கும் காரணத்தினால், இம் மாதிரிக் காரணங்களினால் ரூபம் சேவையின் துணைவனாக, சகயோகியாக இருக்கும். ஆனால் விசேஷ ஈர்ப்பு இருககும் காரணத்தினால் சூட்சும பற்றுதலில் விருப்பம் இருந்து கொண்டே யிருக்கும். இதன் விளைவாக என்ன நடக்கும்? தந்தையின் கொடுப்பினை என்பதை மறந்து விடுகிறார்கள். இவர் மிக நல்ல சகயோகி, நல்ல விசேஷ சொரூபம்மானவர், குணம் நிறைந்தவர் என்று பிறர் நினைக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது அந்த மாதிரி நல்லவராக யார் ஆக்கினார் என்பதை மறந்து விடுகிறார்கள். எண்ண அளவில் கூட ஏதாவது ஆத்மாவின் பக்கம் புத்தியின் ஈர்ப்பு இருக்கிறது என்றால், அந்த ஈர்ப்பு ஆதரவாக ஆகிவிடுகிறது. ஸ்தூல ரூபத்தில் சகயோகியாக இருக்கும் காரணத்தினால் தேவையான நேரத்தில் தந்தைக்குப் பதிலாக முதலில் அவர் நினைவில் வருவார். ஒருவேளை இரண்டு நான்கு நிமிடங்கள் கூட ஸ்தூல ஆதரவு நினைவில் வருகிறது என்றால், அந்த நேரம் தந்தையின் ஆதரவு நினைவில் இருக்குமா? இன்னொரு விஷயம் ஒருவேளை இரண்டு நான்கு நிமிடங்கள் கூட நினைவு யாத்திரையின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்றால், துண்டித்தப்பிறகு இணைப்பதற்கு கடும் முயற்சி செய்யவேண்டியதாக இருக்கும். ஏனென்றால் நிரந்தரம் என்பதில் வித்தியாசம் ஏற்பட்டுவிட்டது இல்லையா! இதயத்தில் திலாரமிற்குப் பதிலாக வேறு யார் பக்கமாவது ஏதாவது காரணத்தினால் இதயத்தின் ஈர்ப்பு ஏற்படுகிறது. இவருடன் பேசுவது நன்றாக இருக்கிறது, இவருடன் அமர்ந்து இருப்பது நன்றாக இருக்கிறது. இவருடன் தான் எந்த வார்த்தை சென்றால் ஏதோ கரும்புள்ளி (தவறு) இருக்கிறது. இவருடன் தான் என்ற எண்ணம் வருவது என்றாலே பலகீனம் வந்தது. பொதுவாக அனைவருமே பிடித்தமானவர்கள் தான். ஆனால் இவர் கொஞ்சம் அதிகம் பிடித்தமானவராக அனுபவம் ஆகிறது. அனைவர் மீதும் ஆன்மீக அன்பு வைப்பது, பேசுவது அல்லது சேவையில் சகயோகத்தைப் பெறுவது மற்றும் கொடுப்பது வேறு விஷயமாகும். விசேஷத்தைப் பாருங்கள், குணத்தைப் பாருங்கள், ஆனால் இவருடைய குணம் தான் மிக நன்றாக இருக்கிறது, இவருடையது தான் என்பதை இடையில் கொண்டுவராதீர்கள். இவர் தான் என்ற வார்த்தை பிரச்சனையை உருவாக்குகிறது. இதைத்தான் பற்றுதல் என்று கூறுவது. வெளிப்படையான ரூபம் சேவைக்கானதாக இருக்கும். ஞானம் யோகம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவருடன் தான் யோகா செய்ய வேண்டும், இவருடைய யோகாதான் நன்றாக இருக்கிறது என்று இவருடையது தான் என்ற வார்த்தை வரக்கூடாது. இவர் தான் சேவையில் சகயோகியாக ஆக முடியும், இந்த சேவை துணைவன் தான் வேண்டும் என்பது இழுக்கிறது என்றால், இது பற்றுதலில் அடையாளம். எனவே இவர் தான் என்ற வார்த்தையை அகற்றிவிடுங்கள். அனைவரும் நல்லவர்கள், விசேஷத்தைப் பாருங்கள், சகயோகியாக ஆகுங்கள், மேலும் ஆக்குங்கள். ஆனால் முதலில் சிறிதளவு இழுக்கும், பிறகு அதிகரித்து அதிகரித்து பயங்கரமான ரூபமாக ஆகிவிடும். பிறகு அவரே விரும்பினால் கூட அதிலிருந்து விடுபட முடியாது. ஏனென்றால் உறுதியான கயிறாக ஆகிவிடும். முதலில் மிக சூட்சுமனதாக இருக்கும். பிறகு மிக உறுதியானதாக ஆகிவிடும். அதனால் அறுப்படுவது கடினமாகி விடும். ஆதரவு ஒரு தந்தை தான். எந்த ஒரு மனித ஆத்மாவும் ஆதரவாக இல்லை. தந்தை யாரையாவது சகயோகியாக, பொறுப்பாளராக ஆக்குகிறார். ஆகையால் ஆக்குபவரை மறந்து விடாதீர்கள். தந்தை ஆக்கினார். தந்தை இடையில் வருவதினால் அதாவது, எங்கு தந்தை இருப்பாரோ அங்கு பாவம் நடக்காது. தந்தையிடையிலிருந்து சென்றுவிட்டார் என்றால் பாவம் நடக்கும். அப்படி ஒரு விஷயம் இந்த ஆதாரமாக ஆக்கிவிடுவதாக இருந்தது. 

    இன்னொரு விஷயம் ஏதாவது பௌதீக சாதனங்களை ஆதாரமாக ஆக்கியிருக்கிறார்கள். சாதனம் இருக்கிறது என்றால் சேவையிருக்கும். சாதனம் கிடைப்பதில் கொஞ்சம் மேலே கீழே செல்கிறது என்றால் சேவை செய்வதிலும் மேலே கீழே போவார்கள். சாதனங்களை காரியத்தில் ஈடுபடுத்துவது என்பது வேறு விஷயம். ஆனால் சாதனங்களின் வசமாகி சேவை செய்வது என்பது சாதனங்களை ஆதாரமாக ஆக்குவது. சாதனங்கள் சேவையின் வளர்ச்சிக்காக இருக்கின்றன. எனவே அந்த சாதனங்களை அதன் பிரகாரம் காரியத்தில் கொண்டு வாருங்கள், சாதனங்களை ஆதாரமாக ஆக்காதீர்கள். ஆதாரம் ஒரு தந்தை தான். சாதனமோ அழியக்கூடியது. அழியும் சாதனங்களை ஆதாரமாக ஆக்குவது என்றால், எப்படி சாதனம் அழியக்கூடியதோ அதேபோல் மன நிலையும் சில நேரம் மிக உயர்ந்ததாக, சில நேரம் இடைப்பட்டதாக, சிலநேரம் தாழ்ந்ததாக மாறிக் கொண்டேயிருக்கும். அழியாத ஒரே சீரான நிலை இருக்காது. அப்படி இரண்டாவது விஷயமாக அழியும் சாதனங்களை ஆதாரமாக நினைக்காதீர்கள். இவைகள் சேவைக்காக ஒரு கருவியாக மட்டும் இருக்கின்றன. சேவைக்காக காரியத்தில் ஈடுபடுத்தினீர்கள், மற்றும் விலகி விட்டீர்கள். சாதனங்களின் ஈர்ப்பில் மனம் ஈர்க்கப்படக் கூடாது. அப்படி இந்த இரண்டுவிதமான ஆதாரங்களை சூட்சும ரூபத்தில் ஆதாரமாக ஆகியிருப்பதைப் பார்த்தோம். எப்பொழுது கர்மாதீத் நிலை ஏற்படவேண்டியதாக இருக்குமோ அப்பொழுது ஒவ்வொரு நபர், பொருள், காரியத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்டவராக ஆவது, விலகியிருப்பவராக ஆவது இதைத்தான் கர்மாதீத் நிலை என்று கூறுவது., கர்மாதீத் என்றால் காரியம் செய்வதிலிருந்து விலகியவராக ஆகிவிடுவது இல்லை. செய்யும் காரியத்தின் பந்தனங்களிலிருந்து விலகியவராக இருப்பது, விலகியராகி காரியம் செய்வது என்றால், காரியத்திலிருந்து விலகி யிருப்பது. கர்மாதீத் நிலை என்றால், பந்தனத்திலிருந்து விடுப்பட்ட, யோக சொரூப, ஜீவன் முக்த் நிலை. 

    இன்னொரு முக்கிய விசயமாக இதைப்பார்த்தோம். அவ்வப்போது பகுத்தறியும் சக்தியில் அநேக குழந்தைகள் பலகீனமானவராக ஆகீவிடுகிறார்கள். பகுத்தறிய முடியாது, எனவே ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள். பகுத்தறியும் சக்தி பலகீனமாக இருக்கும் காரணத்தினால் புத்தியின் ஈடுபாடு ஒருமித்து இருக்காது. எங்கு ஒருமித்த நிலை இருக்குமோ அங்கு பகுத்தறியும் சக்தி இயல்பாக அதிகரிக்கும். ஒருமித்த நிலை என்றால் ஒரு தந்தையுடன் எப்பொழுதும் முழு ஈடுபாட்டில் மூழ்கியிருப்பது. ஒருமித்த நிலையின் அடையாளம் எப்பொழுதும் பறக்கும் கலையின் அனுபவம் நிறைந்த ஒரே சீரான நிலையிருக்கும். ஒரே சீரான நிலை என்பதின் பொருள் அதே வேகம் இருக்கிறது என்றால், ஒரே சீரான நிலை இருக்கிறது என்பதல்ல, ஒரே சீரான நிலை என்றால் எப்பொழுதும் பறக்கும் கலையின் அனுபவம் இருக்க வேண்டும், இதில் ஒரே சீரான நிலை நேற்று என்னவாக இருந்ததோ அதில் இன்று சதவிகிதம் வளர்ச்சியடைந்ததாக அனுபவம் செய்ய வேண்டும். இதைத்தான் பறக்கும் கலை என்று சொல்வது. அந்த மாதிரி சுயமுன்னேற்றத்திற்காக, சேவையின் முன்னேற்றத்திற்காக, பகுத்தறியும் சக்தி மிக அவசியம். பகுத்தறியும் சக்தி பலகீனமாக இருக்கும் காரணத்தினால் தன்னுடைய பலகீனத்தை பலகீனம் என்று புரிந்து கொள்வதில்லை. இன்னும் அதிகமாக தன்னுடைய பலகீனத்தை மறைப்பதற்காக அல்லது நிரூபிப்பதற்காக அல்லது பிடிவாதம் செய்வார்கள். இந்த இரண்டு விஷயங்களை மறைப்பதற்கான விசேஷ சாதனங்கள். மனதில் சில நேரம் உணருதலும் இருக்கும், ஆனால் இருந்தும் முழுமையான பகுத்தறியும் சக்தியில்லாத காரணத்தினால் தன்னை எப்பொழுதும் சரி மற்றும் புத்திசாலி என்று நிரூபிப்பார்கள். புரிந்ததா! கர்மாதீத் ஆகவும் ஆகவேண்டும் இல்லையா? வரிசை எண்ணோ ஒன்றில் வரவேண்டும் இல்லையா? சோதனை செய்யுங்கள். நல்ல முறையில் யோக சொரூபமானவர் ஆகி பகுத்தறியும் சக்தியை தாரணை செய்யுங்கள். ஒருமித்த புத்தியுடையவராகி பிறகு சோதனை செய்யுங்கள். அதனால் என்னென்ன சூட்சும குறையிருக்குமோ அது தெளிவான ரூபத்தில் தென்படும். நீங்கள உங்களையே சரியாகத்தான் இருக்கிறேன், மிக நன்றாக போய்க்கொண்டிருக்கிறேன், கர்மாதீத் ஆக நான் தான் ஆவேன் என்று உங்களை நீங்கள் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் நேரம் வரும்பொழுது இந்த சூட்சும பந்தனம் மேலே செல்லவிடாமல் ஆக்கிவிட்டது என்று அப்படி நடந்து விடக்கூடாது. பிறகு அந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? காலில் கட்டப்பட்டிருக்கும் நபர் ஒருவேளை பறக்க விரும்புகிறார் என்றால், பறப்பாரா அல்லது கீழே இருந்துவிடுவாரா? எனவே இந்த சூட்சும பந்தனம் தேவையான நேரத்தில் வரிசை எண்ணைப் பெறுவதில் மற்றும் உடன் செல்வதில் அல்லது எவரெடியாக ஆவதில் பந்தனமாக ஆகிவிடக்கூடாது. எனவே பிரம்மா பாபா சோதனைச் செய்து கொண்டிருந்தார். யாரை உங்களுரைடய ஆதாரமாக நினைத்தீர்களோ அது ஆதாரம் இல்லை, ஆனால் அது ராயல் கயிறு. எப்படி பொன் மானின் உதாரணம் உள்ளது இல்லையா? இது சீதையை எங்கு கொண்டு சென்றது. அப்படி இந்த பந்தனம் தான் பொன் மானாகும், இதை பொன் என்ற நினைப்பது என்றால், தன்னுடைய சிரேஷ்டப் பாக்கியத்தை இழப்பது. தங்கம் இல்லை ஆனால் இழப்பது. இராமை இழந்தார். அசோகவனத்தில் துன்புற்று அமர்ந்திருந்தார். 

    பிரம்மா பாபாவிற்கு குழந்தைகள்மீது விசேஷ அன்பு இருக்கிறது. எனவே பிரம்மா பாபா எப்பொழுதும் குழந்தைகளைத் தனக்குச் சமமாக எவரெடியாக, பந்தனமற்றவராக பார்க்க விரும்புகிறார். பந்தனமற்றவர்களின் காட்சியைத்தான் பார்த்தார் இல்லையா? எவ்வளவு நேரத்தில் எவரெடியானார் யாருடைய பந்தனத்திலாவது கட்டப்பட்டாரா? இன்னார் எங்குயிருக்கிறார் என்று யாருடைய நினைவாவது வந்ததா? இன்னார் சேவையில் துணையாக இருப்பவர் என்ற நினைவு வந்ததா? அப்படி எவர் ரெடியின் பங்கை (பார்ட்) கர்மாத் நிலையின் பங்கைப் பார்த்தீர்கள் இல்லையா? எவ்வளவு தான் குழந்தைகள் மீது அதிக அன்பு இருந்ததோ அந்தளவு அன்பானவராக, விலகியிருப்பவராக பார்த்தீர்கள் இல்லையா! அழைப்பு வந்தது, உடனே சென்று விட்டார். இல்லை என்றால் மிக அதிகமான அன்பு குழந்தைகள் மீது பிரம்மா பாபாவிற்கு தான் இருந்தது எவ்வளவு அன்பானவராக இருந்தரோ அந்தளவு விலகியவராகவும் இருந்தார். விலகியிருப்பதையும் நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள் இல்லையா? ஏதாவது ஒரு பொருள் அல்லது உணவு பதார்த்தம் தயாராகி விட்டது என்றால், அது பாத்திரத்தில் ஒட்டாது விலகி விடும் இல்லையா? அப்படி சம்பூரணம் ஆவது என்றால், அது விலகி விட்டுவிடுவது என்றால், விலகியவர் ஆகிவிடுவது. ஆதாரம் ஒரே ஒரு அழியாத ஆதாரம் மட்டும் தான். எந்த நபரையும், வைபவத்தையும், பொருளையும் ஆதாரகமாக ஆக்காதீர்கள். இதைத்தான் கர்மாதீத் நிலை என்று கூறுவது. ஒருபொழுதும் மறைக்காதீர்கள். மறைப்பதால் அது இன்னும் அதிகரித்துக் கொண்டே யிருக்கும். விசயம் பெரியதாக இருக்காது. ஆனால் எந்தளவு மறைப்பார்களோ அந்த அளவு அந்த விஷயத்தை பெரியதாக ஆக்கிவிடுகிறார்கள். எந்தளவு தன்னை சரி என்று நிருபிக்க முயற்சி செய்கின்றார்களோ, அந்தளவு விஷயத்தை பெரியதாக்கிவிடுகிறார்கள். எந்தளவு பிடிவாதம் செய்வார்களோ அந்தளவு விஷயத்தை பெரிதாக்குகிறார்கள். எனவே விஷயத்தை பெரியதாக ஆக்காமல் ஆரம்ப அளவிலேயே அதை அழித்து விடுங்கள் அது சுலபமாகவும் இருக்கும், மேலும் குஷியும் ஏற்படும். இந்த விஷயம் கடந்தது, அதையும் கடந்து வந்து விட்டேன், இதிலேயும் வெற்றி அடைந்து விட்டேன் என்றால் அந்த குஷி இருக்கும். புரிந்ததா? வெளிநாட்டினர் கர்மாதீத் நிலையை அடையக்கூடிய ஊக்கம் உற்சாகம் நிறைந்தவர்கள் தான் இல்லையா? இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு பிரம்மா பாபா விசேஷமாக சூட்சும பாலனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது அன்பு நிறைந்த பாலனை, அறிவுரை கூறி எச்சரிக்கை செய்வதில்லை. புரிந்ததா? ஏனென்றால், பிரம்மா பாபா குழந்தைகளாகிய உங்களை விசேஷமாக ஆவாஹனம் (அழைத்து) செய்து பிறவி கொடுத்திருக்கின்றார். பிரம்மாவின் எண்ணத்தின் மூலம் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். பிரம்மா எண்ணத்தின் மூலம் உலகத்தைப் படைத்தார் என்று கூறுகிறார்கள் இல்லையா! பிரம்மாவின் எண்ணத்தின் மூலம் இந்த பிராமணர்களின் இந்தளவு படைப்பு படைக்கப்பட்டிருக்கிறது இல்லையா? பிரம்மாவின் எண்ணத்தினால், ஆவாஹனத்தினால் படைக்கப்பட்ட விசேஷ ஆத்மாக்கள். செல்லமானவர்கள் ஆகிவி:ட்டீர்கள் இல்லையா? இவர்கள் வேகமாக முயற்சி செய்து முதலில் வருவதற்கான ஊக்கம் உற்சாகம் நிறைந்தவர்கள் என்று தந்தை பிரம்மா நினைக்கின்றார். வெளிநாட்டுக் குழந்தைகளின் விசேஷங்களினால் விசேஷ அலங்காரம் செய்ததற்கான விஷயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேள்வியும் கேட்பார்கள், பிறகு விரைவிலேயே புரிந்தும் கொள்வார்கள், விசேஷமாக புத்திசாலிகள் நீங்கள். எனவே தந்தை தனக்குச் சமமாக அனைத்து பந்தனங்களிலிருந்து விடுப்பட்டு மற்றும் அன்பானவர் ஆவதற்காக சமிக்ஞை கொடுக்கின்றார். யார் எதிரில் இருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றார் என்பதல்ல, அனைத்துக் குழந்தைகளுக்கும் கூறுகின்றார். தந்தையின எதிரில் எப்பொழுதும் அனைத்து பிராமண குழந்தைகளும் பாரதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தந்தையின் எதிரில் இருக்கிறார்கள். மிக நல்ல நல்ல ஆன்மீக உரையாடல் செய்கிறார்கள். சென்ற வருடத்தை விட இந்த வருடத்தின் முடிவு (ரிசல்ட்) மிக நன்றாக இருக்கிறது என்று ஏற்கனவே கூறினோம் இல்லையா? இதிலிருந்து முன்னேற்றத்தை அடைபவர்கள் என்று நிரூபணம் ஆகிறது. நீங்கள் பறக்கும் கலையில் செல்லக் கூடிய ஆத்மாக்கள். யாரை தகுதியானவர் என்று பார்க்கின்றமோ அவர்களுக்கு சம்பூரண யோகி ஆவதற்கான சமிக்ஞை கொடுக்கப்படுகிறது. நல்லது. 

    எப்பொழுதும் கர்ம பந்தனத்திலிருந்து விடுப்பட்ட, யோக சொரூப ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் ஒரு தந்தையைத் ஆதாரமாக ஆக்கக்கூடிய குழந்தைகளுக்கு, எப்பொழுதும் சூட்சும பலகீனங்களிலிருந்தும், விலகியிருக்கக்கூடிய குழந்தைகளுக்கு, எப்பொழுதும் ஒருமித்த நிலை மூலமாக மிக நல்ல பகுத்தறியும் சக்தியுள்ள குழந்தைகளுக்கு, எப்பொழுதும் நபர் மற்றும் பொருளின் அழியும் ஆதாரத்தைவிட்டு விலகியிருக்கும் குழந்தைகளுக்கு, அந்த மாதிரி தந்தைக்கு சமமான ஜீவன் முக்த் கர்மாதீத் நிலையில் நிலைத்திருக்கக்கூடிய விசேஷ குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம். 

    நிர்மல் சாந்தா தாதி அவர்களை பாப்தாதா சந்திக்கின்றார். எப்பொழுதும் தந்தையின் கூடவே இருப்பவராக இருக்கிறீர்கள் யார் தொடக்கத்திலிருந்து தந்தையின் தொடர்பிலேயே இருந்து வருகிறார்களோ அவர்களுக்கு தந்தையின் துணையின் அனுபவம் ஒருபொழுதும் குறைவாக ஆக முடியாது. குழந்தைப் பருவத்தின் உறுதிமொழி ஒன்று இருக்கிறது. எப்பொழுதும் கூடவே இருப்போம், எப்பொழுதும் கூடவே செல்வோம். அப்படி எப்பொழுதும் துணையின் உறுதிமொழி என்று கூறினாலும், அல்லது வரதானம் என்று கூறினாலும் அது கிடைத்திருக்கிறது. இருந்தாலும் எப்படி தந்தை அன்பு நிறைந்த உறவு முறையை வைத்து நடந்து கொள்வதற்காக அவ்யக்த் ரூபத்திலிருந்து வியக்த ரூபத்தில் வருகிறார். அதேபோன்று குழந்தைகளும் அன்பின் உறவு முறையை வைத்து நடந்துக் கொள்வதற்காக வந்து சேர்ந்து விடுகிறார்கள். அந்த மாதிரி தான் இல்லையா? எண்ணத்தில் என்ன? ஆனால் கனவில் கூட, அதைத்தான் ஆழ்மனது என்று கூறுகிறீர்கள்... அந்த நிலையில் கூட தந்தையின் துணை ஒருபொழுதும் விடுபட முடியாது. அந்தளவு உறுதியான சம்மந்தம் இணைந்திருக்கிறது. எத்தனை பிறவிகளின் சம்மந்தம். முழு கல்பத்திற்கான சம்மந்தம். இந்த பிறவியின் கணக்குப்படி சம்மந்தம் முழு கல்பமும் இருக்கும். இதுவோ கடைசி பிறவியில் சில குழந்தைகள் சேவைக்காக அங்காங்கு பிரிந்து சென்றுவிட்டார்கள். எப்படி இவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்கள், நீங்கள் சிந்துவில் வந்து சேர்ந்து விட்டீர்கள். அப்படி ஒவ்வொருவரும் வேறு வேறுயிடங்களில் சென்றுள்ளீர்கள். ஒருவேளை இவர்கள் வெளிநாட்டிற்குச் செல்லவில்லை என்றால் இத்தனை சென்டர்கள் எப்படி திறந்திருக்கும். 

    நல்லது. எப்பொழுதும் உடன் இருக்கக்கூடிய, துணையாக இருப்பேன் என்ற உறுதிமொழிப்படி நடக்கக்கூடிய பரதாதி நீங்கள்! பாப்தாதா குழந்தைகளின் சேவையின் ஊக்கம் உற்சாகத்தைப் பார்த்து குஷியடைகிறார். நீங்கள் வரதானி ஆத்மாக்களாக ஆகியிருக்கிறீர்கள். பாருங்கள், இப்பொழுதிலிருந்தே கூட்டம் கூட தொடங்கிவிட்டது. எப்பொழுது இன்னும் வளர்ச்சி அடைந்து விடுமோ அப்பொழுது எவ்வளவு கூட்டம் இருக்கும். இது வரதானி ரூபத்தின் விசேஷத்தின் வேர் உருவாகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது அதிக கூட்டம் ஆகிவிட்டது என்றால், பின்பு என்ன செய்வீர்கள். வரதானம் கொடுப்பீர்கள், திருஷ்டி கொடுப்பீர்கள். இங்கிருந்து தான் சைத்தன்ய மூர்த்திகள் பிரசித்தி ஆவார்கள். எப்படி தொடக்க காலத்தில் அனைவரும் உங்களை தேவிகள் என்று கூறினார்கள் அதேபோன்று இறுதியிலும் உங்களைத் தெரிந்துக் கொண்டு தேவிகள் தேவிகள் என்று கூறுவார்கள். ஜெய் தேவி ஜெய் தேவி என்பது இங்கிருந்து தான் தொடங்கியது. நல்லது. 

    வரதானம் : 


    ஈஸ்வரிய சட்டத்தைப் புரிந்து விதி மூலம் சித்தியை பிராப்பிதி செய்யக்கூடிய முதல் டிவிஷனின் அதிகாரி ஆகுக 

    தைரியம் என்ற ஒரு அடி இருக்கிறது என்றால் உதவி என்ற பல அடி இருக்கிறது நாடகத்தில் இந்த சட்டத்தின் விதி நிரம்பியிருக்கிறது. ஒருவேளை இந்த விதி சட்டத்தில் இருக்கவில்லையென்றால் அனைவரும் உலகின் முதல் இராஜாவாக ஆகிவிடுவார்கள். வரிசைக்கிரமாக ஆவதற்காக சட்டம் இந்த விதியின் காரணமாகத்தான் உருவாகிறது. எனவே எந்தளவு விரும்புகிறீர்களோ அந்தளவு தைரியம் வையுங்கள் மற்றும் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சமர்பபணமானவராக இருந்தாலும் அல்லது குடும்பத்தில் இருப்பவராக இருந்தாலும், அனைவருக்கும் அதிகாரம் (உரிமை) சமமானது. ஆனால் விதி மூலம் சித்தி (பலன் கிடைக்கும்) இந்த ஈஸ்வரிய சட்டத்தைப் புரிந்து அலட்சியத்தின் லீலையை முடிவு கட்டினீர்கள் என்றால், முதல் டிவிஷனில் வருவதற்கான அதிகாரம் கிடைத்து விடும். 

    சுலோகன்: 


    எண்ணத்தின் பொக்கிஷத்திற்காக சிக்கனத்தின் அவதாரமாக ஆகுங்கள். 

    ***ஓம்சாந்தி ***

    Brahma Kumaris Murli Tamil 29 December 2019

    No comments

    Note: Only a member of this blog may post a comment.