Brahma Kumaris Murli Tamil 26 December 2019

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    Brahma Kumaris Murli Tamil 26 December 2019

    Brahma Kumaris Murli Tamil 26 December 2019
    Brahma Kumaris Murli Tamil 26 December 2019

    26.12.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன் 

    இனிமையான குழந்தைகளே! தந்தையின் உதவியாளராகி இரும்புயுகமான மலையை தங்கயுகமாக ஆக்க வேண்டும், முயற்சி செய்து புதிய உலகிற்காக முதல் தரமான பதவியை முன் பதிவு செய்ய வேண்டும். 

    கேள்வி: 


    தந்தையின் முக்கியமான கடமை என்ன? எந்த ஒரு கடமையை நிறைவேற்றுவதற்கு சங்கமயுகத்தில் தந்தை வரவேண்டியதாகிறது? 

    பதில்: 


    வியாதியில் வாடும் மற்றும் துக்கமான குழந்தைகளை சுகமாக ஆக்க வேண்டும், மாயாவுடைய பிடியிலிருந்து விடுவித்து சுகத்தின் பொக்கிஷத்தைக் கொடுக்க வேண்டும். இது தான் தந்தையின் முக்கிய கடமையாகும், இதனை சங்கமயுகத்தில் தான் தந்தை பூர்த்தி செய்கின்றார். பாபா கூறுகின்றார். நான் உங்கள் அனைவருடைய குறைகளைப் போக்கி, அனைவர் மீதும் கருணை காட்டுவதற்காக வந்திருக்கிறேன். இப்பொழுது முயற்சி செய்து 21 பிறவிகளுக்காக தன்னுடைய உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. பாடல்: கள்ளம் கபடமற்ற தந்தை, தனிப்பட்டவராக விளங்குகின்றார். 

    ஓம் சாந்தி. 


    கள்ளம்கபடமற்ற சிவபகவானின் வாக்கியம்- பிரம்மாவின் தாமரை வாய் மூலம் தந்தை கூறுகின்றார்- இந்த மனித உலக மரமானது பல்வேறு விதமான தர்மங்களால் ஆனது. இந்த கல்ப விருட்சம், அதாவது படைப்பின் மூன்று கால ரகசியத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றேன். பாடல் கூட இவருக்கு மகிமை கூறப்படுகிறது. சிவபாபாவின் பிறப்பு இங்கு தான் ஏற்படுகிறது, நான் பாரதத்தில் தான் வருகிறேன் என தந்தை கூறுகின்றார். சிவபாபா எப்பொழுது அவதரித்தார்? என்பது மனிதர்களுக்குத் தெரியாது. ஏனென்றால், கீதையில் கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டனர், துவாபரயுகத்திற்கான விஷயமில்லை. குழந்தைகளே 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட நான் வந்து இந்த ஞானத்தைக் கொடுத்திருந்தேன் என தந்தை புரிய வைக்கின்றார். இந்த கல்ப மரத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்து விடும், ஆக இந்த மரத்தை நன்றாகப் பாருங்கள். சத்யுகத்தில் உண்மை யாகவே தேவி-தேவதைகளின் அரசாட்சி இருந்தது, திரேதா யுகத்தில் இராம்-சீதையின் ஆட்சி இருந்தது. பாபா மூன்று காலத்தின் ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். பாபா, நாங்கள் மாயாவின் பிடியில் எப்பொழுது மாட்டிக் கொண்டோம்? என குழந்தைகள் கேட்கின்றனர். துவாபரயுகத்திலிருந்து என பாபா கூறுகின்றார். பிறகு வரிசைப்படியாக மற்ற தர்மங்கள் வரும். ஆக கணக்கு பார்த்தால் புரியும். அதாவது, இந்த உலகத்தில் நாம் மீண்டும் எப்பொழுது வருவோம்? நான் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கமயுகத்தில் என் கடமையை நிறைவேற்ற வருகின்றேன் என சிவபாபா கூறுகின்றார். அனைத்து மனிதர்களும் துக்கத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக பாரதவாசிகள். நாடக அனுசாரப்படி நான் பாரதத்தை மட்டுமே சுகமாக ஆக்குகிறேன். குழந்தைகள் நோய், வாய்ப்பட்டால் தந்தையின் கடமை மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும். இது மிகவும் பெரிய கடுமையான வியாதியாகும். இந்த வியாதிகளுக்கு முக்கிய காரணம் 5 விகாரங்கள் ஆகும். இந்த வியாதி எப்பொழுதிலிருந்து ஏற்பட்டது? என குழந்தைகள் கேட்கின்றனர். துவாபரயுகத்திலிருந்து ஏற்பட்டது. இராவணனின் விசயத்தையும் புரிய வைக்க வேண்டும் இராவணனை யாரும் பார்க்க முடியாது, புத்தி மூலமாகப் புரிந்து கொள்ள முடியும். தந்தையைக் கூட புத்தி மூலமாகவே புரிந்து கொள்ள முடியும். ஆத்மா மனம், புத்தி உள்ளடங்கியது. நம்முடைய தந்தை பரமாத்மா என்பது ஆத்மாவிற்குத் தெரியும். துக்கம், சுகத்தின் பாதிப்பு ஆத்மாவில் ஏற்படுகிறது. உடலில் இருக்கும் பொழுது ஆத்மா துக்கத்தை அனுபவிக்கிறது. பரமாத்மாவாகிய என்னை துக்கமாக்காதீர்கள் என கூறமாட்டார்கள். தந்தையும் கூறுகின்றார். என்னுடைய பங்கு அவ்வாறு இருக்கிறது, அதாவது கல்ப-கல்பமாக சங்கமயுகத்தில் நான் வந்து என்னுடைய பங்கை நடிக்கின்றேன். எந்த குழந்தைகளை நான் சுகமானவர்களாக அனுப்பி வைத்தேனோ, அவர்கள் துக்கமாகி விட்டனர். எனவே நாடக அனுசாரப்படி நான் வர வேண்டியதாக ஆகிவிட்டது. மற்றபடி பலவிதமான அவதாரங் களுக்கான விஷயம் இல்லை. பரசுராமர் கோடா-யால் சத்திரியர்களை வதம் செய்தார் எனக் கூறப்படுகிறது, இவையனைத்தும் கட்டுக் கதைகளாகும். எனவே இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார், என்னை நினைவு செய்யுங்கள். 

    இவர்கள் தான் ஜெகதம்பா, ஜெகத்பிதாவாக இருக்கிறார்கள். தாய் மற்றும் தந்தையின் தேசம் எனக் கூறப்படுகிறதல்லவா! நீங்கள் தான் தாயும், தந்தையுமாக இருக்கின்றீர்கள், உங்களுடைய கருணையின் மூலமாக எங்களுக்கு சுகத்தின் பொக்கிஷம் கிடைக்கின்றது, என பாரதவாசிகள் நினைவு செய்கின்றனர். இருந்தாலும் யார் எவ்வளவு முயற்சி செய்கின்றனரோ அவ்வளவு தான் அடைகின்றனர். சினிமாவுக்குச் சென்றாலும் கூட முதல் வகுப்பிற்கு முன்பதிவு செய்கின்றனர் அல்லவா! தந்தையும் கூறுகின்றார் சூரிய வம்சியாக, சந்திர வம்சியாக ஆவதற்கு முன்பதிவு செய்யுங்கள், யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு உயர்ந்த பதவி அடைவார்கள். ஆகவே, அனைவருடைய குறைகளையும் போக்குவதற்கு தந்தை வந்திருக்கிறார். இராவணன் அனைவருக்கும் மிகவும் துக்கத்தை கொடுத்து விட்டான். எந்த மனிதரும் யாருக்கும் கதி-சத்கதி கொடுக்க முடியாது. இதுதான் கலியுகத்தின் கடைசி நேரமாகும். குருமார்கள் சரீரத்தை விட்டாலும் இங்கு தான் மீண்டும் பிறக்க வேண்டும், ஆகவே அவர்கள் மற்றவர்களுக்கு சத்கதியைக் கொடுக்க முடியுமா? அனைத்து குருமார்களும் ஒன்று சேர்ந்து அழுக்கான உலகத்தை சுத்தமாக்க முடியுமா? கோவர்த்தன மலையைப் பற்றி கூறுகின்றார்கள் அல்லவா! இந்த தாய்மார்கள் இரும்பு யுகமான மலையை தங்கமயமான யுகமாக மாற்றுகின்றனர். கோவர்த்தன மலைக்கு பூஜையும் செய்கின்றனர், அது இயற்கை தத்துவத்திற்கான பூஜையாகும். சந்நியாசிகளும் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கின்றனர், பிரம்ம தத்துவத்தை பரமாத்மாவாக, பகவானாக புரிந்துள்ளனர். இதெல்லாம் கற்பனை என தந்தை கூறுகின்றார். பிரம்மாண்டத்தில் ஆத்மாக்கள் அணுவைப் போன்று புள்ளியாக இருக்கும், நிராகாரமான மரமும் காட்டப்படுகிறது. ஒவ்வொரு தர்மத்திற்கும் தனித்தனி பிரிவு இருக்கும். பாரதத்தின் சூரிய வம்சம், சந்திர வம்சம் மரத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது, பிறகு வளர்ச்சியடையும். நான்கு தர்மங்கள் முக்கியமானது. எந்தெந்த தர்மங்கள் எப்பொழுது வந்தது? என கணக்கு பாருங்கள். குருநானக் 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். சீக்கியர்கள் 84 பிறவிகளின் பங்கை எடுத்தனர் என கூற முடியாது. 84 பிறவிகள் முழு காலத்திலும் வரக் கூடிய பிராமணர்களுடையது என தந்தை கூறுகின்றார். உங்களுடையது தான் ஆல்ரவுண்ட் பார்ட் ஆகும் என பாபா புரிய வைக்கின்றார். பிராமணர், தேவதா, சத்திரியர்;, வைசியர், சூத்திரராக நீங்கள் ஆகின்றீர்கள் அதாவது யார் முதலில் தேவி-தேவதைகளாக ஆனார்களோ அவர்களே முழு காலச் சக்கரத்திலும் வருகின்றனர். நீங்கள் வேத, சாஸ்திரங்களை நிறைய கேட்டு வந்தீர்கள்; என தந்தை கூறுகின்றார். எனவே இப்பொழுது இதனைக் கேளுங்கள் மற்றும் முடிவு செய்யுங்கள், அதாவது சாஸ்திரங்கள் சரியானதா அல்லது குருமார்கள் சொல்வது சரியானதா அல்லது தந்தை கூறுவது சரியானதா? தந்தையை சத்தியமானவர் என கூறப்படுகிறது. நான் சத்தியத்தைக் கூறுகின்றேன், இதன் மூலம் சத்யுகம் உருவாகின்றது. மேலும் துவாபர யுகத்திலிருந்து நீங்கள் பொய்யானதைக் கேட்டு வந்தீர்கள் அதன் மூலம் நரகமாகி விட்டது. 

    தந்தை கூறுகின்றார்- நான் உங்களுடைய அடிமையாக இருக்கிறேன், பக்திமார்க்கத்தில் நாங்கள் உங்களுடைய அடிமையாக இருக்கிறோம் என நீங்கள் பாடி வந்தீர்கள். இப்பொழுது நான் குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். தந்தையை நிராகார், நிரகங்காரி என அழைக்கப்படுகிறது. என்னுடைய கடமை குழந்தை களாகிய உங்களை சதா சுகமாக ஆக்க வேண்டும் என தந்தை கூறுகின்றார். பாடலில் கூட இருக்கிறது, அதாவது உள்ளும், புறமும் வேறுபாட்டை வெளியேற்றுங்கள். மற்றபடி தம்பட்டம் அடிப்பதற்கான அவசியமில்லை. 

    இவர் மூன்று காலத்தின் முழு செய்தியினைக் கூறுகின்றார். நீங்கள் அனைவரும் குழந்தைகள் நடிகர்களாக இருக்கின்றீர்கள், நான் இந்த நேரம் செய்பவர், செய்விப்பவராக இருக்கிறேன் என பாபா கூறுகின்றார். நான் இவர் மூலமாக (பிரம்மா மூலமாக) படைத்தல் காரியத்தை செய்ய வைக்கின்றேன், மற்றபடி கீதையில் எழுதப் பட்டது போல எதுவும் இல்லை. இப்பொழுது நடைமுறைக்கான விசயமல்லவா! குழந்தைகளுக்கு இந்த சகஜமான ஞானம் மற்றும் சகஜமான யோகத்தைக் கற்றுத் தருகிறேன், யோகத்தில் ஈடுபடுத்துகிறேன். யோகத்தில் ஈடுபடுத்துபவர், புத்தி எனும் பையை நிரப்புபவர், குறைகளை நீக்குபவர் என கூறப்படுகிறதல்லவா! கீதையின் முழு அர்த்தமும் புரிய வைக்கப்படுகிறது. யோகத்தைக் கற்பிக்கின்றேன். மேலும் கற்க வைக்கின்றேன், குழந்தைகள் யோகத்தை கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றீர்கள் அல்லவா! யோகத்தின் மூலம் எங்களது ஆத்ம தீபத்தை ஒளியேற்றுபவர் என கூறுகின்றனர். இப்படிப்பட்ட பாடலை வீட்டில் அமர்ந்து கேட்டால் முழு ஞானமும் புத்தியில் சுழலும். தந்தையை நினைப்பதன் மூலமாக ஆஸ்தியின் போதையும் அதிகமாகும். பரமாத்மா, பகவான் என்று கூறுவதால் இனிமையான அனுபவம் ஏற்படாது. பாபா என்றாலே ஆஸ்தி தான். 

    இப்பொழுது குழந்தைகள் நீங்கள் பாபாவிடமிருந்து மூன்று கால (ஆதி, மத்ய, அந்த்) ஞானத்தைக் கேட்டு பிறகு மற்றவர் களுக்கும் கூறுகின்றீர்கள், இதுதான் ஞானம் என்ற சங்கை முழங்குவதாகும். உங்களுடைய கையில் எந்தவொரு புத்தகமும் இல்லை. குழந்தைகள் தாரணை மட்டும் செய்ய வேண்டும். நீங்கள் உண்மையான ஆன்மீக பிராமணர்கள், ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள் உண்மையான கீதை மூலமாக பாரதம் சொர்க்கம் ஆகின்றது. அவர்கள் வெறும் கதைகளை உருவாக்கி விட்டனர். நீங்கள் அனைவரும் பார்வதிகள், உங்களுக்கு இந்த அமரகதை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் திரௌபதிகள், அங்கு யாரும் ஆடைகளைக் களைவதில்லை. ஆக அப்படியானல் அங்கு குழந்தைகள் எப்படி பிறப்பார்கள்? என கேட்கின்றனர். அட, அவர்கள் நிர்விகாரிகளாக இருப்பார்கள் எனவே விகாரத்திற்கான விசயங்கள் எப்படி இருக்க முடியும்? யோக பலத்தால் குழந்தைகள் பிறப்பார்கள் என உங்களால் புரிந்து கொள்ள முடியாது, நீங்கள் வாக்குவாதம் செய்கீன்றீர்கள். ஆனால் இவை சாஸ்திரங்களுக்கான விஷயமல்லவா! அதுதான் சம்பூர்ணமான நிர்விகாரி உலகம், இது விகாரமான உலகம். நாடக அனுசாரப்படி மாயா உங்களை மீண்டும் துக்கமானவர்களாக்கி விடும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் கல்ப-கல்பமாக எனது கடமையை நிறைவேற்ற வந்திருக்கிறேன். கல்பத்திற்கு முன்பான செல்லமான குழந்தைகள் தான் என்னிடம் வந்து தனது பிராப்தியை அடைவார்கள் என நான் அறிந்திருக்கிறேன். அறிகுறி தென்படுகிறது,  அதாவது அதே மகாபாரத யுத்தத்தின் நேரம் இதுவாகும். நீங்கள் மீண்டும் தேவி-தேவதா அதாவது சொர்க்கத்தின் எஜமானராக முயற்சி செய்ய வேண்டும். இங்கு ஸ்தூலமான யுத்தத்திற்கான விசயம் ஏதுமில்லை. அசுரர்களுக்கும் தேவதைகளுக்கும் யுத்தம் ஏற்பட்டதில்லை, அங்கு யுத்தம் செய்வதற்கு மாயாவே கிடையாது. அரைக் கல்பத்திற்கு எந்த விதமான யுத்தமோ, வியாதியோ, துக்கம், அசாந்தியோ கிடையாது. அட, அங்கு சதா காலமும் சுகம், வசந்த காலமாக இருக்கும். மருத்துவ மனைகள் கிடையாது, மற்றபடி பள்ளிக்கூடம் படிப்பதற்காக இருக்கும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் இங்கிருந்து பிராப்தி அடைந்து செல்வீர்கள். மனிதர்கள் படிப்பின் மூலமாக தனது கால் நிற்கின்றனர் யாரோ கேட்டார்கள். நீங்கள் யாருடையதை உண்கின்றீர்கள்? நாங்கள் எங்களுடைய அதிர்ஷ்டத்தின் படி உண்கிறோம் என கூறியதாக கதையில் இருக்கிறது. அங்கு எல்லைக்குட்பட்ட அதிர்ஷ்டம் இருக்கிறது, நீங்கள் இப்பொழுது தன்னுடைய எல்லையற்ற அதிர்ஷ்டத்தை உருவாக்குகின்றீர்கள். நீங்கள் அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை உருவாக்குகின்றீர்கள், இதனால் 21 பிறவிகளுக்காக தனது இராஜ்ய பாக்கியத்தை அனுபவம் செய்வீர்கள். இதுதான் எல்லையற்ற சுகத்தின் பிராப்தியாகும், இப்பொழுது குழந்தைகள் நீங்கள் வித்தியாசத்தை நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள், பாரதம் எவ்வளவு சுகமாக இருந்தது. இப்பொழுது நிலைமை எப்படி இருக்கிறது. யாரெல்லாம் கல்பத்திற்கு முன்பாக இராஜ்ய பாக்கியத்தை அடைந்தார்களோ, அவர்களே மீண்டும் அடைவார்கள். டிராமாவில் என்ன இருக்கிறதோ அது கிடைக்கட்டும் என்பது இல்லை, பிறகு பசியில் இறந்து விடுவார்கள். இந்த டிராமாவின் இரகசியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரத்தில் இவ்வளவு ஆயுள் காலம் என தவறாக எழுதி விட்டனர், அநேக விதமான வழி முறைகள் இருக்கின்றன. நாங்கள் சுகமாக தான் இருக்கிறோம் என சிலர் கூறுகின்றனர். அட, நீங்கள் ஒருபொழுதும் நோய்வாய்ப்படவில்லையா? நோய் சரீரத்திற்கு வருகிறது, ஆத்மாவில் எதுவும் பதியாது எனக் கூறுகின்றனர். அட, அடிபட்டால் துக்கம் ஆத்மாவில் தான் ஏற்படுகிறதல்லவா! இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். இது பாடசாலை, ஒரேயொரு டீச்சர் கற்பிக்கின்றார். ஞானமும் ஒன்று தான், இலட்சியம், குறிக்கோளும் ஒன்றுதான். அதாவது, நரனிலிருந்து நாராயணர் ஆக வேண்டும். யார் தோல்வியடை கின்றனரோ அவர்கள் சந்திர வம்சத்தில் செல்வார்கள். யார் தேவதைகளாக இருந்தார்களோ அப்பொழுது சத்திரியராக இல்லை, சத்திரியராக இருந்த பொழுது வைசியராக இல்லை, வைசியராக இருந்த பொழுது சூத்திரராக இல்லை. இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். மாதாக்களுக்காக மிகவும் சகஜமானது. பரிட்சை ஒன்று தான். ஞானத்தில் தாமதமாக வந்தால் எவ்வாறு படிக்க முடியும் என நினைக்க வேண்டாம். ஆனால், நடைமுறையில் இப்பொழுது புதியவர்கள் மிகவும் வேகமாக முன்னேறுகின்றனர். மற்றபடி மாயா இராவணனுக்கு எந்த ரூபமும் கிடையாது, இன்னார் இடத்தில் காமம் என்ற பூதம் இருக்கிறது என கூறுகின்றனர், மற்றபடி இராவணன் பூதமாகவோ, சரீரத்துடனோ இருப்பதில்லை. 

    நல்லது, அனைத்து விசயங்களையும் விட இனிமையானது மன்மனாபவ. என்னை நினைவு செய்யுங்கள், இந்த யோக அக்னியால் பாவங்கள் அழிந்து விடும் என கூறுகின்றார். தந்தை வழிகாட்டியாகி வந்திருக்கிறார். பாபா கூறுகின்றார். குழந்தைகளே! நான் நேரில் வந்து குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றேன். கல்ப-கல்பமாக என்னுடைய கடமையை நிறைவேற்ற வருகின்றேன். குழந்தைகளாகிய உங்களுடைய உதவியின் மூலம் நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுகின்றேன் என பரலோகத் தந்தை கூறுகின்றார். உதவி செய்தீர்கள் என்றால் நீங்களும் உயர்ந்த பதவி அடைவீர்கள். நான் எவ்வளவு பெரிய தந்தையாக இருக்கிறேன், மிகப் பெரிய யாகத்தைப் படைத்திருக்கிறேன். பிரம்மாவுடைய வம்சாவழியைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் பிராமணக் குழந்தைகள் தங்களுக்குள் சகோதரன்-சகோதரிகள். சகோதரன்-சகோதரி ஆகி விட்டால் கணவன்-மனைவி என்ற பார்வை மாறி விடும். இந்த பிராமண குலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது என தந்தை கூறுகின்றார். தூய்மையாக இருப்பதற்கான யுக்திகள் இருக்கின்றன. இது எப்படி முடியும்? என மனிதர்கள் கூறுகின்றனர். சேர்ந்திருந்தால் தீப்பற்றாமல் இருக்க முடியுமா? இவ்வாறு முடியாது என சொல்கின்றனர். இருவருக்கிடையில் ஞானம் என்ற வாள் இருந்தால் ஒரு பொழுதும் தீப் பிடிக்காது என பாபா கூறுகின்றார். ஆனால் இருவரும் மன்மனாபவ என்ற நிலையில் இருந்து, சிவபாபாவை நினைத்து கொண்டு, தன்னைத்தான் பிராமணர் என புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ளாமல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர், இவ்வாறு நிந்தனைகளையும் பெற வேண்டியதாக இருக்கிறது. கிருஷ்ணருக்கு யாராவது நிந்தனை செய்ய முடியுமா! கிருஷ்ணர் வந்திருந்தால் வெளி நாட்டிலிருந்து அனைவரும் விமானத்தில் வருவார்கள், மிகவும் கூட்டம் சேர்ந்து விடும். பாரதத்தில் பிறகு என்னாகும் என கூற முடியாது. 

    நல்லது, இன்று போக் தினமாகும். இது தாய் வீடாக இருக்கிறது, அந்த உலகம் மாமியார் வீடாகும். சங்கமயுகத்தில் சந்திப்பு ஏற்படுகிறது, இதனை சிலர் ஏதோ மந்திரம் என புரிந்துள்ளனர். இந்த சாட்சாத்காரம் என்பது என்ன, பக்திமார்க்கத்தில் எவ்வாறு சாட்சாத்காரம் ஏற்படுகிறது, என பாபா புரிய வைக்கின்றார். இதில் சந்தேக புத்தி வேண்டாம். இதுவும் ஒரு பழக்கவழக்கமாகும். இது சிவபாபாவின் பொக்கிஷ அறையாகும், அவரை நினைவு செய்து போக் வைக்க வேண்டும். யோகத்தில் இருப்பதுதான் நல்லது, பாபாவின் நினைவு ஏற்படும். நல்லது! 

    இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம். 

    தாரணைக்கான முக்கிய சாரம்: 


    1. தன்னைத்தான் பிரம்மா வம்சத்தைச் சேர்ந்தவர் என புரிந்து கொண்டு பக்காவான பிராமணர் ஆக வேண்டும். ஒரு பொழுதும் இந்த பிராமண குலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த கூடாது. 

    2. தனக்குச் சமமான நிராகார், நிரகங்காரியாகி தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். ஆன்மீக சேவையில் ஈடுபட வேண்டும். 

    வரதானம்: 


    சேவைகளின் ஈடுபாட்டில் இருந்தபடி இடையிடையே ஏகாந்தவாசியாக ஆகக் கூடிய அந்தர்முகி (உள் நோக்கு முகமானவர்) ஆகுக 

    அமைதியின் சக்தியை பயன் படுத்துவதற்காக அந்தர்முகியாகவும், ஏகாந்தவாசியகவும் ஆவது அவசியம். பல குழந்தைகள் சொல்கின்றனர் - அந்தர் முகி நிலையின் அனுபவம் செய்யவோ, ஏகாந்தவாசியாக ஆவதற்கோ நேரமே கிடைப்பதில்லை, ஏனென்றால் சேவையில் ஈடுபாடு, பேச்சு சக்தியில் ஈடுபாடு மிகவும் அதிகரித்து விட்டது. ஆனால் அதற்காக அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஒன்றாக எடுப்பதற்குப் பதிலாக இடையிடையே சிறிது நேரம் எடுத்தாலும் கூட சக்திசாலியான நிலை உருவாகி விடும். 

    சுலோகன்: 


    பிராமண வாழ்வில் யுத்தம் செய்வதற்குப் பதிலாக மகிழ்ச்சியை கொண்டாடினீர்கள் என்றால் கடினமானதும் கூட சகஜமானதாக ஆகி விடும். 

    ***ஓம்சாந்தி ***

    Brahma Kumaris Murli Tamil 26 December 2019

    No comments

    Note: Only a member of this blog may post a comment.