BK Today's Tamil Murli 24 Murli 2019

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Today's Tamil Murli 24 Murli 2019
    24.05.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்

    "இனிமையான குழந்தைகளே! பாபா என்ன சொல்கின்றாரோ, அதை உங்களுடைய மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும், நீங்கள் சூரிய வம்சத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காக இங்கே வந்துள்ளீர்கள், எனவே தாரணையும் செய்ய வேண்டும்"

    கேள்வி:-


    எப்போதும் புத்துணர்வோடு இருப்பதற்கான சாதனம் என்ன?

    பதில்:


    எப்படி வெயில் மின்விசிறி புத்துணர்வடையச் செய்கிறது, அதேபோல் எப்போதும் சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் புத்துணர்வாக இருப்பீர்கள். சுய தரிசன சக்கரதாரியாக ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும், என்று குழந்தைகள் கேட்கின்றார்கள்? பாபா கூறுகின்றார் - குழந்தைகளே, ஒரு வினாடி. குழந்தைகளாகிய நீங்கள் கண்டிப்பாக சுயதரிசன சக்கரதாரியாக ஆக வேண்டும், ஏனென்றால் இதன் மூலம் தான் நீங்கள் சக்கரவர்த்தி இராஜா ஆக முடியும். சுயதரிசன சக்கரத்தை சுற்றக் கூடியவர்கள் சூரிய வம்சத்தவர்களாக ஆகின்றார்கள்.

    ஓம் சாந்தி.


    விசிறி கூட சுற்றுகிறது அனைவரையும் புத்துணர்வாக்குகிறது. நீங்களும் கூட சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகி அமர்ந்தீர்கள் என்றால் மிகவும் புத்துணர்வாகின்றீர்கள். சுயதரிசன சக்கரதாரியின் அர்த்தத்தைக் கூட யாரும் தெரிந்திருக்கவில்லை, எனவே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்றால் சக்கரவர்த்தி இராஜா ஆக மாட்டார்கள். நாம் சக்கரவர்த்தி இராஜாவாக ஆகுவதற்காக சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகியிருக்கிறோம் என்று சுயதரிசன சக்கரதாரிகளுக்கு நிச்சயம் இருக்கும். கிருஷ்ணரிடம் கூட சக்கரம் காட்டுகிறார்கள். இலஷ்மி-நாராயணன் சேர்ந்திருப்பவர்களுக்கும் காட்டுகிறார்கள், தனியாகவும் காட்டுகிறார்கள். சுயதரிசன சக்கரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சக்கரவர்த்தி இராஜாவாக ஆக முடியும். விஷயம் மிகவும் சகஜமாகும். குழந்தைகள் கேட்கிறார்கள் -- பாபா, சுயதரிசன சக்கரதாரிகளாக ஆவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? குழந்தைகளே ஒரு வினாடி. பிறகு நீங்கள் விஷ்ணுவம்சத்தவர்களாக ஆகின்றீர்கள். வார்த்தை மிகவும் எளிதானதாகும். நாம் புதிய உலகத்தில் சூரிய வம்சத்தவர்களாக ஆகின்றோம். நாம் புதிய உலகத்திற்கு எஜமானர் கள் சக்கரவர்த்திகளாக ஆகின்றோம். சுயதரிசன சக்கரதாரியிலிருந்து விஷ்ணுவம்சத்தை சார்ந்தவர்களாக ஆவதற்கு ஒரு வினாடி ஆகிறது. மாற்றக் கூடியவர் சிவபாபா ஆவார். சிவபாபா விஷ்ணுவம்சத்தை சார்ந்தவர்களாக மாற்றுகின்றார், வேறு யாரும் மாற்ற முடியாது. விஷ்ணுவம்சத்தை சார்ந்தவர்கள் சத்யுகத்தில் இருக்கிறார்கள், இங்கே இல்லை, என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இது விஷ்ணுவம்சத்தை சார்ந்தவர்களாக ஆவதற்கான யுகமாகும். நீங்கள் இங்கு வருவதே விஷ்ணு வம்சத்தை சார்ந்தவர்களாக ஆவதற்காகத் தான், அதைத் தான் சூரிய வம்சம் என்று சொல்லப்படுகிறது. ஞான சூரிய வம்சத்தவர்கள், என்ற வார்த்தை மிகவும் நன்றாக இருக்கிறது. விஷ்ணு சத்யுகத்தின் எஜமானனாக இருந்தார். அதில் இலஷ்மி-நாராயணன் இருவரும் இருந்தனர். குழந்தைகள் இங்கே, லஷ்மி-நாராயணன் அல்லது விஷ்ணுவம்சத்தவர்களாக ஆவதற்கு வருகிறார்கள். இதில் குஷியும் அதிகமாக ஏற்படுகிறது. புதிய உலகத்தில், தங்கயுக உலகத்தில் விஷ்ணு வம்சத்தவர்களாக ஆக வேண்டும். இதைவிட உயர்ந்த பதவி வேறு இல்லை, இதில் அதிக குஷி இருக்க வேண்டும். கண்காட்சியில் நீங்கள் புரிய வைக்கின்றீர்கள். உங்களுடைய குறிக்கோளே இது தான். இது மிகப் பெரிய பல்கலைக்கழகம் என்று சொல்லுங்கள். இதனை ஆன்மீக பல்கலைக்கழகம் என்று சொல்லப்படுகிறது. குறிக்கோள் இந்தப்படத்தில் இருக்கிறது. குழந்தைகள் இதை புத்தியில் வைக்க வேண்டும். குழந்தைகள் புரிய வைப்பதற்கு ஒரு வினாடியே ஆகும் அளவிற்கு எப்படி எழுதுவது. நீங்கள் தான் புரிய வைக்க முடியும். அதில் கூட எழுதப்பட்டிருக்கிறது, நாங்கள் விஷ்ணு வம்சத்தவர்கள் தேவி-தேவதைகளாக இருந்தோம் அதாவது தேவி-தேவதா குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தோம். பாபா புரிய வைக்கின்றார் -- இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, பாரதத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் சூரியவம்ச தேவி-தேவதைகளாக இருந்தீர்கள். குழந்தை களுக்கு இப்போது புத்தியில் வந்துள்ளது. சிவபாபா குழந்தைகளுக்கு கூறுகின்றார்: குழந்தைகளே! நீங்கள் சத்யுகத்தில் சூரியவம்சத்தை சார்ந்தவர்களாக இருந்தீர்கள். சிவபாபா சூரியவம்ச தலைமுறையை உருவாக்க வந்திருந்தார். உண்மையில் பாரதம் சொர்க்கமாக இருந்தது. இவர்கள் தான் பூஜிக்கத்தக்கவர்களாக இருந்தார், பூஜாரிகள் யாரும் இருக்கவில்லை. பூஜைக்கான பொருட்கள் எதுவும் இல்லை. இந்த சாஸ்திரங்களில் தான் பூஜைக்கான பழக்க-வழக்கங்கள் போன்றவை எழுதப்பட்டுள்ளன. இது பொருட்கள். எனவே எல்லையற்ற தந்தை சிவபாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். அவர் ஞானக்கடலாக இருக்கின்றார், மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றார். அவரை விருக்ஷபதி அல்லது பிரகஸ்பதி என்றும் சொல்லப்படுகிறது. பிரகஸ்பதியின் திசை மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. விருக்ஷபதி உங்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார் - நீங்கள் பூஜிக்கத்தக்க தேவி-தேவதைகளாக இருந்தீர்கள் பிறகு பூஜாரியாக ஆகியுள்ளீர்கள். நிர்விகாரிகளாக இருந்தார்களே தேவதைகள், அவர்கள் எங்கே சென்றார்கள்? கண்டிப்பாக மறுபிறவி எடுத்து-எடுத்து கீழே இறங்குவார்கள். எனவே ஒவ்வொரு வார்த்தையையும் குறிக்க வேண்டும். மனதிலா அல்லது காகிதத்திலா? இதை யார் புரிய வைப்பது? சிவபாபா. அவர் தான் சொர்க்கத்தைப் படைக்கின்றார். சிவபாபா தான் குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுக்கின்றார். பாபா இல்லாமல் வேறு யாரும் கொடுக்க முடியாது. லௌகீக தந்தை தேகதாரியாவார். நீங்கள் உங்களை ஆத்மா என்று புரிந்து பரலௌகீக தந்தையை நினைவு செய்கிறீர்கள் - பாபா, எனவே பாபா பதிலளிக்கின்றார் - ஹே, குழந்தைகளே! எனவே எல்லையற்ற தந்தையாகி விட்டார். குழந்தைகளே நீங்கள் சூரியவம்ச தேவி-தேவதைகள் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தீர்கள் பிறகு நீங்கள் பூஜாரிகளாக ஆகியுள்ளீர்கள். இது இராவண இராஜ்ஜியமாகும். ஒவ்வொரு வருடமும் இராவணனை எரிக்கிறார்கள், இருந்தாலும் கூட இராவணன் இறப்பதே இல்லை. 12 மாதத்திற்குப் பிறகு இராவணனை எரிப்பார்கள். அப்படியென்றால் நாங்கள் இராவண சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுகிறார்கள். இராவணன் என்றால் 5 விகாரங்களின் இராஜ்ஜியம் நிறுவப்பட்டிருக்கிறது. சத்யுகத்தில் அனைவரும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள், இப்போது கலியுகம் பழைய கீழான உலகமாக இருக்கிறது, இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வம்சாவழிகள். சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நாம் பிராமணர்கள் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இப்போது சூத்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இந்த சமயத்தில் அசுர இராஜ்ஜியம் ஆகும். பாபாவை, ஹே, துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவரே, என்று கூறுகிறார்கள். இப்போது சுகம் எங்கே? சத்யுகத்தில். துக்கம் எங்கே இருக்கிறது? துக்கம் கலியுகத்தில் இருக்கிறது. சிவபாபா தான் துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் ஆவார். அவர் சுகத்தின் ஆஸ்தியைத் தான் தருகின்றார். சத்யுகத்தை சுகதாமம் என்று சொல்லப்படுகிறது, அங்கே துக்கம் எனும் பெயரே இல்லை. உங்களுடைய ஆயுளும் அதிகமாக இருக்கிறது, அழவேண்டிய அவசியம் இல்லை. சமயப்படி பழைய சரீரத்தை விட்டுவிட்டு மற்றொன்றை எடுத்துக் கொள்கின்றீர்கள். இப்போது சரீரத்திற்கு வயதாகி விட்டது என்று புரிந்து கொள்கிறார்கள். முதலில் குழந்தைகள் சதோகுண முடையவர்களாக இருக்கிறார்கள், ஆகையினால் குழந்தைகளை பிரம்மஞானிகளை விட உயர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டிருந்தார்கள், ஏனென்றால் பிறகு அவர்கள் விகாரிகளாக கிரகஸ்தத்திலிருந்து சன்னியாசியாக மாறுகிறார்கள், எனவே அவர்களுக்கு அனைத்து விகாரங்களும் தெரிகிறது. சிறிய குழந்தைகளுக்கு இது தெரிவதில்லை. இந்த சமயத்தில் முழு உலகத்திலும் இராவண இராஜ்யம், கீழான இராஜ்யமாகும். சிரேஷ்டாசார தேவி-தேவதைகளின் இராஜ்ஜியம் சத்யுகத்தில் இருந்தது, இப்போது இல்லை. பிறகு வரலாறு திரும்பவும் நடக்கும். உயந்தவர்களாக யார் மாற்றுவார்கள்? இங்கே ஒருவர் கூட உயர்ந்தவர் இல்லை. இதில் அதிக புத்தி வேண்டும். இந்த யுகமே தங்க புத்தி ஆவதற்கான யுகம். பாபா வந்து கல் புத்தியிலிருந்து தங்கபுத்தியாக மாற்றுகின்றார்.


    ஒரு சத்தியமானவரின் சேர்க்கை தான் கரை சேர்க்கும், கெட்ட சேர்க்கை மூழ்கடித்து விடும் என்று சொல்லப்படுகிறது. சத்தியமான பாபாவைத் தவிர மீதி உலகத்தில் கெட்ட சேர்க்கையே ஆகும். நான் சம்பூரண நிர்விகாரியாக மாற்றிவிட்டு செல்கின்றேன், என்று பாபா கூறுகின்றார். பிறகு சம்பூரண விகாரியாக மாற்றுவது யார்? இது யாருக்கும் தெரியவில்லை. பாபா வந்து புரிய வைக்கின்றார், மனிதர்கள் எதையும் தெரிந்திருக்கவில்லை. இராவண இராஜ்யம் அல்லவா? யாருடைய தந்தையாவது இறந்து விட்டால், எங்கே சென்றார் என்று கேளுங்கள். சொர்க்க வாசியாகி விட்டார், என்று சொல்வார்கள். நல்லது, அதனுடைய அர்த்தம் இதுவரை நரகத்தில் இருந்தார் என்று ஆகிறதல்லவா? எனவே நீங்கள் நரகவாசிகள் தான் இல்லையா? புரிய வைப்பதற்கு எவ்வளவு சகஜமான விஷயமாக இருக்கிறது! தன்னை யாரும் நரகவாசியாகப் புரிந்து கொள்வதில்லை. நரகத்தை வேஷ்யாலயம் என்றும், சொர்க்கத்தை சிவாலயம், என்றும் சொல்லப் படுகிறது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலில் இந்த தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. நீங்கள் உலகத்திற்கு எஜமானர்கள் மகாராஜன்-மகாராணியாக இருந்தீர்கள். பிறகு மறுபிறவி எடுக்க வேண்டியிருந்தது. அனைவரையும் விட அதிகமாக மறுபிறவி நீங்கள் தான் எடுத்தீர்கள். இதற்காகத் தான், ஆத்மாவும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தது, என்று பாடப்பட்டிருக்கிறது. நீங்கள் முதல்-முதலில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்த நீங்கள் தான் வந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்றவர்களாக ஆனீர்கள், இப்போது தூய்மையாக வேண்டும், என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது. அழைக்கிறார்கள் அல்லவா! தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங்கள், எனவே ஒரேயொரு பரம சத்குரு வந்து தான் தூய்மையாக்குகின்றார், என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். நான் உங்களை இவருக்குள் அமர்ந்து தூய்மையாக்குகின்றேன், என்று அவரே கூறுகின்றார். மற்றபடி 84 இலட்சம் பிறவிகள் போன்றவைகள் எல்லாம் இல்லை. 84 பிறவிகளாகும். இந்த இலஷ்மி-நாராயணனின் பிரஜைகள் சத்யுகத்தில் இருந்தார்கள், இப்போது இல்லை, எங்கே சென்றார்கள்? அவர்களும் கூட 84 பிறவிகள் எடுக்க வேண்டும். யார் முதல் நம்பரில் வருகிறார்களோ, அவர்கள் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்கள். எனவே முதலில் அவர்கள் செல்ல வேண்டும். தேவி-தேவதைகளின் உலகத்தின் வரலாறு மீண்டும் நடக்கும். சூரிய வம்ச-சந்திரவம்ச இராஜ்யம் கண்டிப்பாகத் திரும்பவும் நடக்கும். பாபா உங்களை தகுதியானவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் சொல்கின்றீர்கள், நாங்கள் நரனிலிருந்து நாராயணனாக ஆகும் இந்த பல்கலைக்கழகம் அல்லது பாடசாலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். இது நம்முடைய குறிக்கோளாகும். யார் நல்ல விதத்தில் முயற்சி செய்வார்களோ, அவர்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். முயற்சி செய்யவில்லையென்றால் பிரஜையில் சிலர் செல்வந்தர்களாகவும், சிலர் குறைவான செல்வந்தவர்களாகவும் ஆகிறார்கள்.இது இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாம் ஸ்ரீமத்தின் மூலம் சிரேஷ்டமானவர்களாக (உயர்ந்தவர்களாக) ஆகிக்கொண்டிருக்கின்றோம், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழிப்படி ஸ்ரீ இலஷ்மி-நாராயணன் அல்லது தேவி-தேவதைகளாக ஆகின்றீர்கள். ஸ்ரீ என்றால் உயர்ந்த என்பதாகும். இப்போது யாரையும் ஸ்ரீ என்று சொல்ல முடியாது. ஆனால் இங்கே யாரெல்லாம் வருகிறார்களோ, அனைவரையும் ஸ்ரீ என்று சொல்லிவி டுகிறார்கள். ஸ்ரீ இன்னார்........... சிரேஷ்டமானவர்களாக தேவி-தேவதைகளைத் தவிர வேறு யாரும் ஆக முடியாது. பாரதம் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருந்தது. இராவண இராஜ்ஜியத்தில் பாரதத்தின் மகிமையையே அழித்து விட்டார்கள். பாரதத்தின் மகிமையும் அதிகமாக இருக்கிறது; நிந்தனையும் அதிகமாக இருக்கிறது. பாரதம் முற்றிலும் செல்வம் நிறைந்ததாக இருந்தது, இப்போது முற்றிலும் எதுவும் இல்லாததாக ஆகியிருக்கிறது. தேவதைக்கு முன்னால் சென்று அவர்களின் மகிமையைப் பாடுகிறார்கள் -- நாங்கள் குணமற்றவர்கள், எங்களிடம் எந்த குணமும் இல்லை. தேவதைகளை சொல்கிறார்கள், அவர்கள் என்ன இரக்கமனமுடையவர்களாகவா இருந்தார்கள். இரக்கமன முடையவர் என்று ஒருவரைத் தான் சொல்ல முடியும், அவர் தான் மனிதர்களை தேவதையாக மாற்றுகின்றார். இப்போது அவர் உங்களுடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார். உத்திரவாதம் அளிக்கின்றார்-- என்னை நினைவு செய்வதின் மூலம் உங்களுடைய பலபிறவிகளின் பாவம் பஸ்பம் ஆகும். மேலும் என்னுடன் அழைத்துச் செல்வேன். பிறகு நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். இது 5 ஆயிரம் ஆண்டுகளின் சக்கரமாகும். புதிய உலகம் இருந்தது பிறகு கண்டிப்பாக உருவாகும். உலகம் தூய்மையற்றதாகும் பிறகு பாபா வந்து தூய்மையாக்குவார். பாபா கூறுகின்றார், தூய்மையற்றதாக இராவணன் மாற்றுகின்றான், நான் தூய்மையாக்குகின்றேன். மற்றபடி இது பொம்மை பூஜையைப் போல் செய்து கொண்டிருக்கிறார்கள். இராவணனுக்கு 10 தலைகள் ஏன் காட்டுகிறார்கள்? என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அப்படிப்பட்ட மனிதன் எப்போதாவது இருந்திருக்கின்றானா? ஒருவேளை 4 கைகளையுடைய மனிதன் இருந்தால் அவர்களின் மூலம் பிறக்கும் குழந்தையும் அப்படி இருக்க வேண்டும். இங்கே அனைவருக்கும் 2 கைகள் தான் இருகிறது. எதுவும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தின் சாஸ்திரத்தை மனனம் செய்து கொள்கிறார்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள் கூட எவ்வளவு பேர் இருக்கின்றனர்! அதிசயமாக இருக்கிறது! இவர் பாபா ஞானத்தின் அதிகாரம் உடையவராக இருக்கின்றார். எந்த மனிதனும் ஞானத்தின் அதிகாரம் உடையவராக ஆக முடியாது. நீங்கள் ஞானக்கடல் என்று என்னையே சொல்கின்றீர்கள் -- சர்வசக்திகளுக்கும் அதிகாரி.......... இது பாபாவின் மகிமையாகும். நீங்கள் பாபாவை நினைவு செய்யும் போது பாபாவிடமிருந்து சக்தியை அடைகின்றீர்கள், அதன்மூலம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகி விடுகின்றீர்கள். நம்மிடம் நிறைய சக்தி இருந்தது, நாம் நிர்விகாரிகளாக இருந்தோம், என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தனியாக முழு உலகத்தையும் இராஜ்ஜியம் செய்தீர்கள் என்றால் சர்வசக்திவான் என்று தானே சொல்ல வேண்டும். இந்த இலஷ்மி-நாராயணன் முழு உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தனர். இந்த சக்தி அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? பாபாவிடமிருந்து. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் அல்லவா? எவ்வளவு சகஜமாகப் புரிய வைக்கின்றார். இந்த 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரிந்து கொள்வது சகஜம் அல்லவா? அதன் மூலம் தான் உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கிறது. தூய்மையற்றவருக்கு உலகத்தின் இராஜ்யம் கிடைக்க முடியாது. தூய்மையற்றவர்கள் அவர்களுக்கு முன்னால் தலைவணங்குகிறார்கள். நாம் பக்தர்கள், என்று புரிந்து கொள்கிறார்கள். தூய்மையானவர்களுக்கு முன்னால் தலை வணங்குகிறார்கள். பக்தி மார்க்கம் கூட அரைகல்பம் நடக்கிறது. இப்போது உங்களுக்கு பகவான் கிடைத்திருக்கின்றார். பகவானுடைய மகாவாக்கியம் -- நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன், பக்தியின் பலனைக் கொடுக்க வந்துள்ளேன். பகவான் ஏதாவதொரு ரூபத்தில் வந்து விடுவார், என்று பாடுகிறார்கள். நான் ஏதாவது மாட்டுவண்டி போன்றவற்றில் வருவேனா என்ன! என்று பாபா கேட்கின்றார். யார் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருந்தாரோ, பிறகு 84 பிறவிகள் முடித்திருக்கிறாரோ, அவருக்குள் தான் நான் வருகின்றேன். சத்யுகத்தில் உத்தமபுருஷர்கள் இருக்கிறார்கள். கலியுகத்தில் கீழான, தமோபிரதானமானவர்கள் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகின்றீர்கள். பாபா வந்து தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாற்றுகின்றார். இது விளையாட்டாகும். ஒருவேளை இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒருபோதும் சத்யுகத்தில் வரமாட்டார்கள். நல்லது!

    இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.


    தாரணைக்கான முக்கிய சாரம்:-


    1. ஒரு பாபாவின் சேர்க்கையின் மூலம் தன்னை தங்கபுத்தியுடையவர்களாக மாற்ற வேண்டும். சம்பூரண நிர்விகாரியாக (முழுமையாக விகாரம் இல்லாதவர்களாக) ஆக வேண்டும். கெட்ட சேர்க்கையிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

    2. நாம் சுயதரிசன சக்கரதாரியாக ஆகுவதின் மூலம் புதிய உலகத்திற்கு எஜமானர்களாக சக்கரவர்த்தியாக ஆகின்றோம், என்ற குஷியிலேயே எப்போதும் இருக்க வேண்டும். நம்மை ஞான சூரியவம்சத்தவர்களாக மாற்றுவதற்கு சிவபாபா வந்திருக்கின்றார். நம்முடைய இலட்சியமே இது தான் ஆகும்.

    வரதானம்:


    நிமித்தமாக இருந்து எந்த சேவை செய்தாலும் எல்லையற்ற விருத்தியின் மூலம் அதிர்வலைகளை (வைபிரேசன்) பரப்பக் கூடிய எல்லையற்ற சேவாதாரி ஆகுக.


    இப்போது எல்லையற்ற மாற்றத்திற்கான சேவையின் வேகத்தை தீவிரப்படுத்துங்கள். செய்து கொண்டு தான் இருக்கிறோம், பிசியாக இருப்பதால் நேரம் கிடைப்பது இல்லை என்று கூறக் கூடாது. நிமித்தமாகி எந்த சேவை செய்தாலும் எல்லையற்ற சகயோகி ஆகிவிட முடியும், விருத்தி எல்லையற்றதாக இருந்தால் போதும், வைபிரேசன் பரவிக் கொண்டே இருக்கும். எல்லையற்றதில் பிசியாக இருக்கும் பொழுது என்ன கடமைகள் இருக்கிறதோ அதுவும் எளிதாகி விடும். ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு விநாடி எல்லையற்ற சேவை செய்வது தான் எல்லையற்ற சேவாதாரி ஆவதாகும்.

    சுலோகன்:


    சிவ தந்தையுடன் இணைந்திருக்கக் கூடிய சிவசக்திகளின் அலங்காரம் ஞானம் என்ற ஆயுதங்களாகும்.


    ***OM SHANTI***

    No comments

    Note: Only a member of this blog may post a comment.